இந்த அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் நிதி மோசடியில் ஈடுபடவில்லையெனவும், அவர்களினால் நியமிக்கப்பட்டவர்களே அவ்வாறு செய்திருப்பதாகவும், அவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் காலத்தில் இடம்பெறாதவை இந்த அரசாங்கத்தில் இடம்பெறுகின்றது. மஹிந்தவின் காலத்தில் குற்றங்கள் கண்டறியப்படவில்லை. அமைச்சர்கள் தண்டிக்கப்படவில்லை.
இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் நிதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் உடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெயாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.