டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் மரணம்

354 0

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்

டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய சிறுவனொருவனே நேற்று சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்விகற்றுவந்த என். எம். எம். முஆத்  (வயது 12) என்ற மாணவனே  இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவன் ஏறாவூர் அல்முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் என்பரின் புதல்வராவார்.

குறித்த மாணவன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a comment