நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தை நீடிப்பதற்கும், பெண்கள் மதுபான விற்பனை, கொள்வனவில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் அரசாங்கம் சட்டம் உருவாக்கியமை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை விடுக்க தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் கொள்கைக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஓரிரு தினங்களில் இது தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.