அடுத்த வாரமளவில் புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மிஹின்லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் ஆகிய விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராய்வதற்கே புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.