இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; ஒருவர் பலி – ஒருவர் காயம்

240 0

 ரக்குவானை, கொஹம்பகந்த – லபுவல்வத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கஹவத்தை, லபுவல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் தோட்டா ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கம்பஹா பட்டபொத பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பிரதேசத்தில் நேற்று மாலை மண்வெட்டிக் கொண்டிருந்த குழுவொன்று மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment