பருவ நிலை மாற்றம்: இந்தியா, சீனாவுக்கு ஐ.நா., பாராட்டு

264 0

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, சீனா ஆகியவை வலிமையான உறுதியுடன் உள்ளது என்றும், தலைமையேற்று நடத்தி வருகிறது என ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, சீனா ஆகியவை வலிமையான உறுதியுடன் உள்ளது என்றும்,  தலைமையேற்று நடத்தி வருகிறது என ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

குளோபல் வார்மிங் என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார்.

இதையடுத்து, நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பேசியதாவது:

பருவநிலை மாற்றம் நம்மை தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. அதேநேரத்தில் இந்த போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஆப்ரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வறட்சி உருவாகியுள்ளது. சிறிய தீவுகளில் சூறாவளி மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த போராட்டத்தில் மற்ற நாடுகள் பங்கேற்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. உலக பொருளாதாரத்தில் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வரும் இரண்டு நாடுகள், போராட்டத்தில் முன்னின்று நடத்தி செல்ல உறுதி பூண்டுள்ளன. அந்த நாடுகள் சீனா மற்றும் இந்தியா.

பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை நாம் சமாளிக்க தவறியதால், அதன் பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை ஏற்று அதன் பாதிப்புகளிலிருந்து நம்மை காக்க முயற்சி செய்து வருகின்றன என தெரிவித்தார்.

Leave a comment