காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் தற்போது 21.27 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. வரப்போகும் வெயில்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு இது போதுமானதாக இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகளின் தேவை கருதி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.