பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்தநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வாழ்த்துச்செய்தியில் கடைசியாக பாபா முத்திரையும் இடம் பெற்றுள்ளது.