வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் 5 பேர் பயணித்தநிலையில் விபத்து இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் இறந்த மற்றும் படுகாயமடைந்த இருவர்களைத் தவிர ஏனையோர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.