மீட்கப்படும் ஆயுதங்களை தெற்கின் பாதாள உலகக்குழுக்களுக்கு விற்பனை

301 0

imagesசிறீலங்கா  புலனாய்வுப் பிரிவினர் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிலர் பாரியளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விடயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றைஅதிபர்  மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இராணுவப் புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் போன்றவர்களை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்துள்ளதாகவும் இவர்கள் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்படும் ஆயுதங்களை தெற்கின் பாதாள உலகக்குழுக்களுக்கு பெருந்தொகைப் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மில்லி மீற்றர் 9 ரக கைத்துப்பாக்கி,12 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கி, ரிபிட்டர் ரக துப்பாக்கி, சொட்கன் போன்றன இவ்வாறு பாதாள உலகக் குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.