கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (12) மாலை 5.45 மணியளவில் வீசிய பலத்த காற்றால் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததால், கொடதெனியாவ முதல் கொடகாவெல வரையான பகுதி வரை மின்சாரம் தடைப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சுமார் பத்து நிமிடங்கள் வரை வேகமாக காற்று வீசியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
வீசிய காற்று சூறாவளியா என்று உறுதிசெய்ய வளிமண்டளவியல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.