மொரட்டுவ, ராவதாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொலையாளிகள் குறித்த தகவல்களும் இதுவரை பதிவாகவில்லை என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் சந்தேகநபர்களை கொலை செய்வதற்கான விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.