நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள் அடங்கிய சகல காட்சிப்படுத்தல்களையும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு உத்தரவிடும்படி கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைக் கேட்டுள்ளார்.
எதிர்கட்சியினரின் படங்களை காட்சிப்படுத்தும் போது மட்டும் தேர்தல் சட்டங்களை ஞாபகப்படுத்தும் பொலிஸாருக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்களையும், பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்களின் படங்களையும் காட்சிப்படுத்தும் போது மட்டும் தேர்தல் சட்டங்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லையெனவும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.