எதிர்வரும் திங்கட்கிழமை 2000 மெட்ரிக் டொன் உரத்துடன் கப்பலொன்று இலங்கை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லக் உரம் கம்பனி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் எந்தவிதமான குறைபாடும் இன்றி உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அக்கம்பனியின் தலைவர் ரோஷன வடுகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் எந்தவிதத்திலும் உர தட்டுப்பாடு இல்லையென அரச உர செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.