உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பக்கச்சார்பின்றி கடமையாற்றவும், தேர்தல் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அறிவுட்டும் நிகழ்வுகள் மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேல் மற்றும் வட மத்திய மாகாண பொலிஸாருக்கான செயலமர்வுகள் தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ளதாகவும் ஏனைய மாகாணங்களுக்கு விரைவில் நடாத்தவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.