கடந்த அரசாங்கத்தில் மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி நடவடிக்கைகளை கண்டறிவதற்கு இன்னும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் நேற்று(12) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.