உள்ளுராட்சித் தேர்தலுடன் அமைச்சரவையில் மாற்றம் ?

234 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவைச் சீர்திருத்தம் ஒன்றை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 17 ஆம் திகதி மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் அரசியல் நிகழ்வுகளை அவதானித்து இந்த மாற்றத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேர்தலின் முடிவுகளையும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனாதிபதி அவதானத்தில் எடுத்துக் கொள்வார் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave a comment