சவால் விடுத்தால், ஐ.தே.க. தனியரசாங்கம் அமைத்துக் காட்டுவோம்- அஜித் பீ. பெரேரா

413 0

எந்தவொரு கட்சியாவது சவால் விடுப்பதாயின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க தாம் தயாராகவுள்ளதாக பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்தறை மாவட்ட பிரதிநிதியுமான அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டரசாங்கத்தை புறக்கணிப்பதாயின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தனி அரசாங்கமொன்றை அமைக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment