பொய்யான கருத்துக்களைப் பரப்புவதை மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இல்லாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக இசுர தேவப்பிரிய ஊடகமொன்றிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.