2020 பொதுத் தேர்தலில் கூட்டணி அரசு குறித்து சந்தேகம்’

212 0

கூட்டணி அரசு வலுவிழந்து வருவதால், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில், தற்போதைய கூட்டணி அரசாங்கம் ஒன்றிணைந்து போட்டியிட முடியாமல் போகலாம் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேசிய பொருளாதாரம் கடும் அதிர்வுகளைச் சந்தித்து வரும் நிலையில், பிறந்திருக்கும் இந்த 2018ஆம் ஆண்டு இலங்கை மீளச் செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சவால்களுக்கு தற்போதைய அரசு முகங்கொடுத்திருக்கிறது.

“அரச நிறுவனங்கள் சிலவற்றின் முன்னேற்றம் மந்த கதியிலேயே காணப்படுகிறது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் வெளிநாட்டு வருமானங்களை ஊக்குவிக்கவும் உள்முக நிதி வளர்ச்சியை அதிகரிக்கவும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை.

“இத்தனை சவால்களுக்கு மத்தியில், வலுவிழந்து வரும் தற்போதைய கூட்டணி அரசாங்கம் 2020 பொதுத் தேர்தல்களில் இணைந்து பங்கேற்க முடியாத நிலை உருவாகக் கூடும்.”

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment