நிதி மோசடி சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
குறித்த விசாரணை அறிக்கை முழுவதுமாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப் பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத இருவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் பொலிஸார் இதன்போது கோரினர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் பிடியாணையையும் பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு மீளவும் டிசம்பர் 8ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சேர்த்த 45 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தைக் கொண்டு ஹெலோகோப் எனும் நிறுவனத்தில் பங்குகளைக் கொள்வனவு செய்ததாகவே இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.