இளைஞன் தற்கொலை : கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

267 0

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உடனடியாக அமுலுக்குவரும் வகையில் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில், ஹப்புத்தளையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞன் கஞ்சா போதைப்பொருளை உடன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக புறக்கோட்டை பொலிஸ் நிலைய கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே கொழும்பு புறக்கோட்டை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்குவரும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment