பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இந்திய என்ஜினீயர் ஸ்ரீநீவாசின் மனைவிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

247 0

அமெரிக்காவில் கென்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்ரீநீவாசின் மனைவிக்கு, அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க அதிபர் டிரம்ப் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், பாராளுமன்ற கூட்டு அமர்வில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரை, ஸ்டேட் ஆப் யூனியன், என அழைக்கப்படுகிறது. இந்த உரையில், நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 30-ம் தேதி கூட்டு அமர்வில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, கென்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியர் ஸ்ரீநிவாசின் மனைவி சுனையானா துமாலாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கான்ஸாஸ் நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இரவு உணவு விடுதியில் இருந்த 2 இந்தியர்களை ‘நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறியபடியே அந்நாட்டு கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) உயிரிழந்தார்.

தற்போது, அவரது மனைவியை அதிபர் உரையாற்ற உள்ள பாராளுமன்ற கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.  அதிபர் டிரம்ப் சார்பில் எம்.பி. கெவின் யோடர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே சுனையானாவை அழைத்தாக கெவின் தெரிவித்தார்.

Leave a comment