மனைவியை சுட்ட இராணுவ வீரர் பணி இடைநீக்கம்

296 0

தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லுத்தினல் கேர்ணல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் குறித்து இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி இரவு பெண்ணொருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், அந்தப் பெண்ணின் கணவரான இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று இவர் கடுவளை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.