அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா ?

292 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று (12) காலை யாழ் நகரிலுள்ள “பிள்ளாயார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது. அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும்

“அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா
இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா”

போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் ஜனாதிபதியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் மக்களைக் கவர்வதற்கு அரசியல் கட்சிகள் என்னென்ன வேடிக்கைகள் காட்டப்போகின்றனவோ என மக்கள் கூறிச் சென்றனர்.

Leave a comment