குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குறித்த வேட்பாளரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 03 மாத காலத்துக்கு தடை செய்வதற்கு தம்புத்தேகம நீதவான் நீதிமன்ற நீதிபதி சமிலா நதீசானி உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுசன பெரமுன சார்பில் நொச்சியாகம பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நொச்சியாகம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் சட்டவிரோதமாக பதாதைகளை ஒட்டிக் கொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.