இலங்கையில் சிறுவர் உரிமை தொடர்பில் 15 ஆம் திகதி ஐ.நா. வில் ஆய்வு

4485 158

இலங்கையில் சிறுவர் உரிமைகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகளுக்கான அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இரு தினங்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் இலங்கையில் கடந்த வருடம் முழுவதும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment