அனைத்து அரசாங்கங்களிலும் இடம்பெற்ற பாரியளவான ஊழல் மோசடிகளே நாட்டின் வறுமை நிலை அதிகரிக்க காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட மோசடி வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஊழல் மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை நாட்டிற்குள் கட்டியெழுப்புவதே தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.