கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னாள் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் வந்த மற்றைய டிப்பர் வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.