யாழில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்

254 0

யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (வயது 36) பிரதீபன் கஜநிதன் (11) பவநிதன் (வயது 9) அருள்நிதன் (வயது 8) இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது 2) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

இவர்களைக் காணவில்லையென உறவினர்களால், கடந்த 09ம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப தகராற்றின் காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a comment