திஸ்ஸமஹாராம மாகம பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு வண்புனர்வுக்கு ஆளாகியுள்ளார்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் 22 வயதுடைய இருவரும் இணைந்து சிறுமியை வண்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு பின்னால் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய போது, வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டு சிறுமியை காப்பாற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் யால காட்டுப் பகுதில் மறைந்து இருந்த போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கியபின் வீரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று இளைஞர்களும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மூன்று இளைஞர்களும் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.