பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபடுவதன் காரணமாக பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் இதற்கு மாற்றுத் திட்டமொன்று குறித்து கல்வி அமைச்சு கருத்தில் கொண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் டிசம்பர் மாத விடுமுறையில் திருத்தி முடிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் கல்வியமைச்சில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியள்ளார். மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை துரிதப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் சேவையில் 35 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதன் காரணமாக சில பாடசாலைகளின் முதலாம் தவணைக்காக கற்றல் நடவடிக்கைகள் காலம்தாழ்த்தப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.