சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே இதனைக் கூறியுள்ளார்.