நடமாடும் விபச்சார விடுதி முற்றுகை, மூன்று பேர் கைது

218 0

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த நடமாடும் விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் சென்ற நபர் ஒருவரும், இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மஹரகம மற்றும் நுகேகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏற்ப பெண்களை விநியோகிப்பதும், சிலபோது வாகனத்திலேயே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த நடமாடும் விடுதியை நடாத்தியவர்களின் நடவடிக்கையாக இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment