மக்களின் கஷ்டத்துக்கு திருடர்களே காரணம்- ஜனாதிபதி

358 0

இந்நாட்டில் இருந்த அனைத்து  அரசாங்கங்களிலும் இடம்பெற்று வந்த பாரியளவிலான ஊழல் மோசடிகளே மக்களின் வறுமை நிலைக்குக்  காரணம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட மோசடி வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஊழல் மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி   கூறியுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது மக்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment