பிணைமுறி அறிக்கை சம்பந்தமான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

231 0
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த அறிக்கையின் பிரதி ஒன்று தமது ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதன்படி தமது ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் ஊடாக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் சம்பந்தமாக விசாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அத்துடன் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக வௌித் தரப்பினர் தேவையில்லை என்றும் தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

மிக விரைவாக இந்த அறிக்கை சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a comment