சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாகம்புர துறைமுக ஊழியர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பணிநீக்கத்திற்கு எதிராக கடந்த 9ம் திகதி இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, மாகம்புர துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கே.டிமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.