காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

244 0

bodyமட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள உன்னிச்சை கார்மேல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மலையார் சின்னத்தம்பி என்ற விவசாயியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த வயல் பகுதியில் சம்பவ தினமான இன்று அதிகாலை 5 மணிக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment