ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஆறுவருடங்கள் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் ஆறு வருடங்கள் (2021 வரை) அவர் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று (11) உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில் சட்ட மா அதிபர் மேற்படி தனது கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.