ஜானக பெரேரா உட்பட 31 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகள் 15 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது தமது சான்றுகளைச் சமர்ப்பிக்கமுடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி அனுராதபுரத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது