இந்தியாவை இணைக்க அமெரிக்கா ஆதரவு

333 0

2069914323modiobamameetஅணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் புது டில்லியில் பாதுகாப்பு உத்திகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான 2 ஆவது சுற்று பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்கெரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் இரு நாடுகள் சார்பிலும் கூட்டறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

அதில் அணுசக்தி விநியோக நாடுகள் குழு அவற்றின் பொதுநலன் கருதி இந்தியாவை இந்த அமைப்பில் இணைத்துக் கொள்ளவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அணுசக்தி வினியோகம் தொடர்பான ஆஸ்திரேலிய குழு மற்றும் வாஸ்சனார் ஏற்பாட்டு குழு ஆகியவற்றிலும் இந்தியாவை இணைத்துக் கொள்ள அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இதனைத்தவிர, சீர்திருத்தி அமைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை இணைத்துக் கொள்ளவேண்டும் எனவும் அமெரிக்காவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 மாதங்களுக்கு முன்னர், தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பின் பேரவை கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் பாகிஸ்தான், சீனா உட்பட்ட சில நாடுகளின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.