நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் இறைமை சீர்குலைந்து கொண்டு செல்கிறது

265 0

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் இறைமை சீர்குலைந்துகொண்டு செல்கிறது. எனவே நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினூடாக அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் இறைமை படிப்படியாக சீர்குலைந்து வருகிறது. அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளினால் நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.கடந்த ஆட்சியில் நாடு பல துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வந்தது. அவ்வபிருத்திகள் அனைத்தும் நல்லாட்சியில் தடைப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

Leave a comment