கம்பஹா மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரமான கனேமுல்ல மேம்பாலம் இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.
ரயில் நிலையத்தின் காரணமாக கனேமுல்ல நகரத்தில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 1768.21 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டள்ள இந்த பாலம் 504 மீற்றர் நீளமுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 20 மாத காலத்திற்குள் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.