சய்டமுக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

311 0

மாலபே சய்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சய்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து, பிரதான வீதியோரம் நின்று, கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“மருத்துவப் படிப்பை பணத்துக்கு விற்பனை செய்தால், பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகளைக் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர், மாணவர்களைக் காப்பாற்றுவதற்கும் சய்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள்” என்றனர்.

Leave a comment