சிங்கப்பூர் பிரஜையைத் தாக்கியதாக கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை சிலாபம் – அம்பகதவெவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு இலக்கானவர் அப் பகுதியில் கடலட்டை வளர்ப்புப் பண்ணை ஒன்றை நடத்தி வந்ததாகவும், சந்தேகநபர் அதில் பணியாற்றிய ஒருவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கமைய, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைத்து இது பற்றி தெரியப்படுத்தியுள்ளார்.
தனக்கு தாக்குதலால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனினும், மரண பயத்தினாலேயே பொலிஸாரின் உதவியை நாடியதாக, சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பிரஜை கூறியுள்ளார்.
சிலாபம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.