பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சமயத்திலும் எம்.பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் சில எம்.பிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோதல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவில்லையெனவும், இருப்பினும், கட்சித் தலைவர்கள் சிலர் இது பற்றி விசாரணை நடத்துமாறு கேட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்