தாக்கியதனாலேயே பதிலடி கொடுத்தோம்- எஸ்.எம். மரிக்கார்

242 0

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மைத் தாக்கியதனாலேயே நாமும் பதிலடி கொடுத்தோம் என அரசாங்க தரப்பு ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற அசம்பாவிதத்தின் பின்னர் எஸ்.எம். மரிக்கார், சமிந்த விஜேசேகர மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை தொடர்பில் தாமும் அறிந்துகொள்ள வேண்டும் என ஆர்வத்தோடு உள்ளோம். நாம் பாராளுமன்றத்துக்கு சண்டையிட்டுக் கொள்வதற்கு வரவில்லை. இருப்பினும், எம்மைத் தாக்கும் போது நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனாலேயே நாமும் தாக்கினோம் என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment