டான் பிராட்மேன் சாதனையை தகர்த்த ஆப்கன் வீரர்

258 0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் பஹீர் ஷா தகர்த்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் பஹீர் ஷா தகர்த்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பஹீர் ஷா (18). இப்போதைய யு-19 கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

பஹீர் ஷா இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 12 இன்னிங்சில் விளையாடி 1096 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 நாட் அவுட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 5 சதங்களும், 2 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ரன் 303. இவரது சராசரி 121.77. இது ஆஸ்திரேலிய வீரர் சர் டொனால்டு பிராட்மேனின் சராசரியான 95.14-ஐ விட அதிகம்.

இதையடுத்து, ஆப்கன் வீரர் பஹீர் ஷா டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு பல்வேறு  வீரர்களும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பஹீர் ஷா கூறுகையில், இது எனக்கு மறக்க முடியாத தருணம். எனக்கு ஆதரவுடன் உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது கோச்சுக்கும் நன்றி. நான் எப்போதும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Leave a comment