யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் (காணொளி)

301 0

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், 1974 ஆம் ஆண்டு இன்றையதினம் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்ட 9 பேரின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

நிணைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலில் பாராளுமனற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான அரியக்குட்டடி பரஞ்சோதி, பா.கஜதீபன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment