யாழில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கிய கேபிள் இணைப்புகள், இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (10) அதிகாலை, யாழிற்கு வருகை தந்து, ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று சட்டவிரோத கேபிள் இணைப்புகளை, அவர்கள் அறுத்து அகற்றியுள்ளனர்.